விளம்பர தொடர்புக்கு- -9445440302 -uthukottaitimes@gmail.com .
விளம்பர தொடர்புக்கு-9445440302 -uthukottaitimes@gmail.com .

Monday, 18 February 2013

பேருந்துகள், நேருக்கு நேர் மோதி விபத்து ..




18--2-2013

ஊத்துக்கோட்டை: ஆந்திர மாநில அரசு பேருந்துகள், நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், மூன்று டிரைவர்கள் உட்பட, 40 பயணிகள், படுகாயம் அடைந்தனர்.

திருப்பதியில் இருந்து, புத்தூர், ஊத்துக்கோட்டை வழியாக, சென்னை செல்வதற்கு, ஆந்திர மாநில அரசு பேருந்து, (ஏபி29 இசட் 3325), நேற்று அதிகாலை புறப்பட்டது. பேருந்தை நின்றரை மண்டலம் எம்.ஜி. கண்டிகையைச் சேர்ந்த, சிவய்யா மகன் அரிபாபு, 36 என்பவர் ஓட்டினார். அதே நேரத்தில், சென்னையில் இருந்து, ஊத்துக்கோட்டை வழியாக, கடப்பா வரை செல்லும், மற்றொரு ஆந்திர மாநில அரசு பேருந்தும் (ஏபி29 இசட் 0790), நேற்று புறப்பட்டது. இந்த பேருந்தை ஓட்டுனர் சீனிவாசலு, 40, ஓட்டி வந்தார். அவருடன் மற்றொரு ஓட்டுனர் மூர்த்தி, 43, சுழற்சி முறையில், பேருந்தை இயக்குவதற்காக உடன் வந்தார்.

நேருக்கு நேர் மோதல்: திருப்பதி - சென்னை செல்லும் பேருந்தில், 10 பேரும், சென்னை - கடப்பா செல்லும் பேருந்தில், 30 பேரும் என, மொத்தம், 40 பேர், பயணம் செய்தனர். நேற்று காலை, 6:45 மணிக்கு, சென்னை - கடப்பா செல்லும் பேருந்து, சென்னை - ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் (எண்-51), பெரம்பூர்பாட்டைக்கு அருகே வந்தது. அப்போது, சாலை விரிவாக்கத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தை கவனிக்காமல் ஓட்டுனர் சீனிவாசலு பேருந்தை ஒட்டிய வந்தார். அப்போது, பள்ளத்தில் பேருந்து கவிழாமல் இருப்பதற்காக, பேருந்தை திடீரென திருப்பினார். அப்போது, திருப்பதி - சென்னை சென்ற, பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இச்சம்பவத்தில், ஓட்டுனர்கள் மூன்று பேர் உட்பட பேருந்தில் பயணம் செய்த, 40 பேரும் காயம் அடைந்தனர்.

டிரைவர்கள் மீட்பு: விபத்து குறித்து தகவல் அறிந்ததும், அக்கம் பக்கத்தினர் வந்து பேருந்துகளுக்கு இடையில் சிக்கி தவித்த, மூன்று டிரைவர்களை மீட்டு, சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த பயணிகள், ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.


போக்குவரத்து பாதிப்பு: இவ்விபத்து காரணமாக, காலை, 7:00 மணி முதல், 10:00 மணி வரை, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து, ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment