விளம்பர தொடர்புக்கு- -9445440302 -uthukottaitimes@gmail.com .
விளம்பர தொடர்புக்கு-9445440302 -uthukottaitimes@gmail.com .

Sunday, 3 November 2013

airtel - now in uthukottai


HI SPEED WIRELESS BROADBAND INTERNET NOW IN UTHUKOTTAI

ஊத்துக்கோட்டையில் அதி நவீன இணைய வசதி..

m k mahal uthukottai

ஊத்துக்கோட்டையில் ஓர் புதிய உலகம் எம்.கே.மகால்

M.K . MAHAL - UTHUKOTTAI


1-11-2013 நவம்பர் மாத இதழ்

இராண்டாம் ஆண்டில் ஊத்துக்கோட்டை டைம்ஸ் இதழ்

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் விளம்பர தாரர்கள், வாசகர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள், அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்..

ஊத்துக்கோட்டை வட்டாரத்தில் மாதந்தோறும் நடைபெறும் நிகழ்வுகள், சம்பவங்கள், என அனைத்தையும் ஒரே குடையின் கீழ் மக்களுக்கு அளித்து வருவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்












Wednesday, 17 July 2013

ஊத்துக்கோட்டை டைம்ஸ் - சூலை மாத இதழ்

சூலை மாத இதழ்                        
 

                                                                   
                    







Sunday, 23 June 2013

வாடகைக் கட்டடத்தில் இயங்கும் ஊத்துக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்...





குறுகலான நெருக்கடியான இடத்தில் இயங்கிவரும் ஊத்துக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு புதியக் கட்டடம் கட்டவேண்டும் என பொதுமக்களும், வழக்கறிஞர்களும் எதிர்நோக்கி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஆந்திர மாநில எல்லையில் ஊத்துக்கோட்டை நகரம் உள்ளது. ஊத்துக்கோட்டை தாலுகாவில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி, எல்லாபுரம் ஒன்றியம், பூண்டி ஒன்றியத்தின் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
மேலும் இங்கு ஊத்துக்கோட்டை, பென்னலூர்பேட்டை, பெரியபாளையம், வெங்கல், ஆரணி ஆகிய காவல் நிலையங்களில் பதிவாகும் வழக்குகள் ஊத்துக்கோட்டை நீதிமன்ற எல்லையில்தான் வருகின்றன.
ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள குறுகலான இடத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த 6 ஆண்டுகளாக தனியார் கட்டடத்தில் இயங்கிவருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், காவலர்கள், பொதுமக்கள் தங்கள் பணிக்காக வந்து செல்கின்றனர்.
தனியார் கட்டடத்துக்கு மட்டும் வாடகையாக ரூ.20 ஆயிரத்துக்கு மேல் செலுத்தப்படுகிறது.
போதிய வசதி இல்லாத குறுகலான இடத்தில் நீதிமன்றம் இயங்கிவருவதால் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்படைகின்றனர்.
ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகிலேயே அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது.
அங்கு ஊத்துக்கோட்டை நீதிமன்றத்துக்கு என சொந்தக் கட்டடம் கட்டினால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டலாம். மேலும் பொதுமக்களும், வழக்கறிஞர்களும் மிகுந்த பயன்பெறுவர்.
மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ஊத்துக்கோட்டையில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வழக்கறிஞர்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.