விளம்பர தொடர்புக்கு- -9445440302 -uthukottaitimes@gmail.com .
விளம்பர தொடர்புக்கு-9445440302 -uthukottaitimes@gmail.com .

Friday, 24 June 2016

ஊத்துக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.





ஊத்துக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு


ஊத்துக்கோட்டை அருகே உள்ள லட்சிவாக்கம் ஊராட்சியில் பெரம்பூர், லட்சிவாக்கம்காலனி போன்ற பகுதிகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு லட்சிவாக்கம் பகுதியை சேர்ந்த சிலர் பெரம்பூர் கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள காலி இடத்தை ஆக்கிரமித்து குடிசைகள் அமைப்பதற்காக கம்புகளை நட்டனர். 

இதை பார்த்த பெரம்பூர் கிராம மக்கள் அதை அகற்றும் படி கூறினர். அதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மறியல்

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் சாலையில் திடீர் என்று மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி, எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீதாலட்சுமி, ராஜராஜன், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மாணிக்கம், பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் சாலை மறியலை விலக்கிக் கொண்டனர். இதனால் ஊத்துக்கோட்டை - பெரிபாளையம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Wednesday, 27 May 2015

அதிக விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்றால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் எச்சரித்தார்.
திருவள்ளூர் மாவட்ட உர விற்பனையாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்துப் பேசியபோது, அரசு நிர்ணயித்துள்ள விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு உரங்களை விற்கக் கூடாது. அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் வந்தால் அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.
உதவி இயக்குநர் எல்.சுரேஷ், துணை இயக்குநர்கள் ஸ்டான்லி, எபிநேசன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில், தொடக்க வேளாண்மை கடன் சங்கச் செயலர்கள், உர விற்பனையாளர்கள் பங்கேற்றனர். சண்முகம் நன்றி கூறினார்.

சிப்காட் தொழிற்பேட்டையால் காற்று மாசு:தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பல தொழிற்சாலைகளால் காற்று மாசு அடைவதாகவும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக, காந்தி உலக மைய நிறுவனர் எம்.எல்.ராஜேஷ் அளித்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கும்மிடிப்பூண்டியில் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பணிமனை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்பட உரிய இடத்தைத் தேர்வு செய்து பேரூராட்சியை குப்பைகளற்ற வகையில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆந்திர மாநிலக் காடுகளில் இருந்து வரும் மழைநீர் வீணாகக் கடலில் கடக்கிறது. அந்த நீரை சேமித்து விவசாயத்து பயன்படுத்தும் வகையில், மேற்கண்ட கால்வாயை தூர்வாரி 3 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும்.
சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கும் கும்மிடிப்பூண்டியில் உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். கும்மிடிப்பூண்டியில் மேம்பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தி, பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளரை பணியில் அமர்த்தி, அனைத்துப் பேருந்துகளும் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
கும்மிடிப்பூண்டி சிப்காட், சுற்றுப்புறப் பகுதிகளில் இயங்கி வரும் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளால் காற்று மாசடைந்து சுவாசிக்கத் தகுதியற்றதாக மாறி வருகிறது. எனவே, காற்று மாசு கண்காணிப்பு நிலையம் அமைத்து, காற்று மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், நிலத்தடி நீர் குறைவுக்குக் காரணமான தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கும்மிடிப்பூண்டியில் திறந்தவெளி, உள் விளையாட்டு அரங்கம் கட்டித்தர வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பால்சாமி, காந்தி உலக மையத்தைச் சேர்ந்த ரவி, மோகன்ராஜ், வெங்கடேஸ்வரலு உள்ளிட்ட பலர் இருந்தனர்

Friday, 11 April 2014

அனந்தேரி - கிருஷ்ண நதிநீர் கால்வாயில் பெண் தவறி விழுந்தார்...


ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆகையால் கிருஷ்ணா நதி கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள அனந்தேரி கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரது மனைவி ஹேமலதா (45) நேற்று மதியம் கிருஷ்ணா நதி கால்வாயின் கரையில் துணி துவைத்து கொண்டிருந்தார். 

அப்போது அவர் நிலை தடுமாறி கால்வாயில் விழுந்து விட்டார். இதனால் அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அங்கிருந்த இளைஞர்கள் சிலர் கால்வாயில் குதித்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் தியணைப்பு படையினரும் தேடினார்கள் ஆனாலும் அந்த பெண் குறித்த எந்த தடையமும் கிடைக்கவில்லை. 
இதனால் அனந்தேரி கிரமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது..

ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றமாகும். ஆகையால் மனசாட்சிப்படி வாக்களியுங்கள்.- மாவட்ட ஆட்சியர் வீரராகராவ்




தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 24–ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு அங்கமாக வாக்குச்சாவடி சீட்டு வழங்கும் பணியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீரராகராவ் ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட அம்பேத்கார்நகரில் நேற்று மாலை தொடங்கி வைத்து பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 24 லட்சத்து 84 ஆயிரத்து 262 வாக்காளர்கள் உள்ளனர். வருகிற 19–ந்தேதி வரை வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி சீட்டு வழங்குவார்கள். 
ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றமாகும். ஆகையால் மனசாட்சிப்படி வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அதிகாரி பரந்தாமன், ஊத்துக்கோட்டை தாசில்தார் சுப்பிரமணி, துணை தாசில்தார் லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Thursday, 10 April 2014

திருவள்ளுர் தனி தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 2 ஆயிரத்து 114 பேர்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில்  மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கொ.வீரராகவராவ் துணை வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். 
அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை வருமாறு:–
கும்மிடிப்பூண்டியில் தொகுதியில்
ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 20 ஆயிரத்து 408 பேர்.
 பெண்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 82 பேர். 
இதரர் 31 பேர். 
மொத்தம் 2 லட்சத்து 43 ஆயிரத்து 521 பேர். 
பொன்னேரியில் தொகுதியில்
ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 14 ஆயிரத்து 97 பேர். 
பெண்கள் 1 லட்சத்து 14 ஆயிரத்து 502 பேர். 
இதரர் 58 பேர். 
மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 657 பேர். 
திருவள்ளூர் தொகுதியில்
ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 932 பேர், 
பெண்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 551 பேர். 
இதரர் 17 பேர் 
மொத்தம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 500 பேர். 
பூந்தமல்லி தொகுதியில்
ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 40 ஆயிரத்து 712 பேர். 
பெண்கள் 1 லட்சத்து 40 ஆயிரத்து 110 பேர். 
இதரர் 35 பேர். 
மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 857 பேர். 
ஆவடி தொகுதியில்
ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 79 ஆயிரத்து 323 பேர். 
பெண்கள் 1 லட்சத்து 74 ஆயிரத்து 928 பேர். 
இதரர் 57 பேர்  
மொத்தம் 3 லட்சத்து 54 ஆயிரத்து 308 பேர். 
மாதவரம் தொகுதியில்
 ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 80 ஆயிரத்து 803 பேர், 
பெண்கள் 1 லட்சத்து 78 ஆயிரத்து 404 பேர். 
இதரர் 64 பேர். 
மொத்தம் 3 லட்சத்து 59 ஆயிரத்து 271 பேர் உள்ளனர்.

திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் 
ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 1 பேர். 
பெண்கள் 1 லட்சத்து 30 ஆயிரத்து 651 பேர். 
இதரர் 54 பேர். 
மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து 706 பேர். 
மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில்
 ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 78 ஆயிரத்து 259 பேர். 
பெண்கள் 1 லட்சத்து 70 ஆயிரத்து 633 பேர், 
இதரர் 79 பேர். 
மொத்தம் 3 லட்சத்து 48 ஆயிரத்து 971 பேர் ஆகும்.
திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதியில் அடங்கிய 6 தொகுதியில் 
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 2 ஆயிரத்து 114 பேர். 
இதில் மொத்த ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 52 ஆயிரத்து 275 பேர், 
பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 49 ஆயிரத்து 577 பேர், 
இதரர் 262 பேர் உள்ளனர்
புதிய வாக்காளர்கள்
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில்
 ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 59 ஆயிரத்து 800 பேர். 
பெண்கள் 1 லட்சத்து 53 ஆயிரத்து 759 பேர். 
இதரர் 60 பேர். மொத்தம் 3 லட்சத்து 13 ஆயிரத்து 619 பேர்.
 திருத்தணி சட்டமன்ற தொகுதியில் 
ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 510 பேர்.
 பெண்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 827 பேர்
,இதரர் 19 பேர்.
 மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 356 பேரும் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 
ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 49 ஆயிரத்து 845 பேரும் 
பெண் வாக்காளர்கள் 14 லட்சத்து 34 ஆயிரத்து 447 பேரும் 
இதரர் 474 என 
மொத்த வாக்காளர்கள் 28 லட்சத்து 84 ஆயிரத்து 766 பேர் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது புதிய வாக்காளர்களாக 
ஆண்கள் 46 ஆயிரத்து 348 பேரும் 
பெண்கள் 47 ஆயிரத்து 530 பேரும் 
இதரர் 34 பேர் என 
மொத்தம் 93 ஆயிரத்து 912 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

Wednesday, 9 April 2014

திருவள்ளுர் தனி தொகுதியில் அதிமுக மற்றும் திமுக விற்கு சரிவு ஏற்படுமா ?

திருவள்ளுர் தனி தொகுதியில் அதிமுக மற்றும் திமுக விற்கு சரிவு ஏற்படுமா ?

வரும் 24.4.14 அன்று நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் திருவள்ளுர் தனி தொகுதியில் மொத்தம் 14 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 6 நபர்கள் சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர்..

இதில் அ.தி.மு.க சார்பிரல் போட்டியிடும் வேட்பாளர் பெயரும் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் பெயரும் பி.வேணுகோபால் என ஓரே பெயரை கொண்டிருப்பதால் அ.தி.மு.க இது அதிமுகவிற்கு பாதகமான முடிவையே ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்..

இதே போல் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் துரை.ரவிக்குமார் பெயரை கொண்ட சுயேட்சை வேட்பாளர் பெயரும் ரவிக்குமார் தான் ஆனார் இவருக்கு இனிசியல் வேறு..

தேர்தல் நேரங்களில் பெரும்பாலன நபர்கள் வேட்பாளர்களின் பெயர்களை படித்தே வாக்களிப்பதால் அதிமுக மற்றும் திமுக விற்கு சரிவு ஏற்படும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மக்களின் முடிவு என்ன காத்திருப்போம் - மே 16 வரை...