விளம்பர தொடர்புக்கு- -9445440302 -uthukottaitimes@gmail.com .
விளம்பர தொடர்புக்கு-9445440302 -uthukottaitimes@gmail.com .

Monday, 5 November 2012

ஊத்துக்கோட்டையில் நவீன சோதனைச்சாவடி






தமிழக-ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டையில் நவீன சோதனைச்சாவடி அமைக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

÷தமிழகத்தின் வடக்குப் பகுதியில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், ஆந்திர மாநில எல்லையை ஒட்டி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கெனவே எல்லைப்பகுதியை ஒட்டி கும்மிடிப்பூண்டி அருகே பெத்திகுப்பம், திருத்தணி அருகே பொன்பாடியில் போலீஸôரால் சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் ஊத்துக்கோட்டையிலும் சோதனைச்சாவடி உள்ளது.

÷ஆந்திர மாநில எல்லையை ஒட்டி உள்ளதால் திருவள்ளூர் மாவட்டம் வழியாக நக்சலைட்டுகள், கொள்ளையர் ஊடுருவல் மற்றும் செம்மரம், ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்டவை நடக்கின்றன. இவை காவல்துறைக்கு பெரும் தலைவலியாக உள்ளன.

÷சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெத்திகுப்பத்தில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ.79 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் காவல்துறை, வனத்துறை, போக்குவரத்து, சுங்கத்துறை பிரிவுகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

÷இதேபோல் திருத்தணி அருகே ஆந்திர எல்லையில் உள்ள பொன்பொடி சோதனைச்சாவடியும் ரூ.10 லட்சம் செலவில் நவீனப்படுத்தப்படுகிறது. ஊத்துக்கோட்டை வழியாகவும் ஆந்திராவில் இருந்து அடிக்கடி செம்மரங்கள் கடத்தல் நடக்கிறது. சமூகவிரோதிகள் நடமாட்டமும் உள்ளது. தற்போது அங்குள்ள காவல் சோதனைச்சாவடியில் எந்த வசதியும் இல்லை. 4 காவலர்கள் சோதனைச் சாவடியில் தங்கி சோதனை செய்கின்றனர். காவலர்களுக்கு கழிப்பறை வசதிகூட இல்லை. தற்போதுள்ள சோதனைச்சாவடியில் மழை காலத்தில் அடிக்கடி ஒழுகும் நிலை உள்ளது.

÷எனவே ஊத்துக்கோட்டையில் நவீன வசதிகளுடன் கூடிய சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் என காவலர்கள், அப்பகுதி மக்கள் எதிர்நோக்கி உள்ளனர். ஊத்துக்கோட்டை வழியாகவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஆந்திரா சென்று வருகின்றன. எனவே இங்கு நவீன மயமாக்கப்பட்ட சோதனைச்சாவடி அமைப்பது அவசியமாகிறது.

மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும் தலையிட்டு இங்கு சோதனைச்சாவடியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமணி-6-11-2012

No comments:

Post a Comment