ஊத்துக்கோட்டை: ஆரணி பேரூராட்சியில் உள்ள ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர்கள் எத்திராஜூலு, பரமசிவம் தலைமை தாங்கினர். பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், துணைத் தலைவர் கிருஷ்ணன், அதிமுக நகர செயலாளர் தயாளன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பொன்.ராஜா எம்எல்ஏ, சோழவரம் ஒன்றியக்குழு தலைவர் கார்மேகம் ஆகியோர் மாணவர்கள் 127 பேருக்கும் மாணவிகள் 169 பேருக்கும் லேப்டாப் வழங்கி பேசினர். துணை தலைமை ஆசிரியர் ஜார்ஜ், ஆசிரியர்கள் முத்துக்குமரன், முனிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கன்னிகைப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு தலைமை ஆசிரியர் அருள்மொழி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் அம்மினி மகேந்திரன், மாவட்ட கவுன்சிலர் சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார், பெற்றோர்ஆசிரியர் கழக நிர்வாகி பழனி, முன்னாள் ஊராட்சி தலைவர் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைமை ஆசிரியர் கவிதா ராணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திரன் 144 பேருக்கு லேப்டாப், 95 பேருக்கு சைக்கிள்களை வழங்கினார்.
நன்றி -தமிழ்முரசு -07.11.2012
No comments:
Post a Comment