ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1200 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், மாம்பாக்கம், வேலக்காபுரம், பிளேஷ்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்து படித்து செல்கின்றனர். இந்த பள்ளிக்கு 1960ம் ஆண்டு எம்ஜிஆர் தனது சொந்த பணத்தில் கட்டிடம் கட்டிக்கொடுத்துள்ளார். இந்த கட்டிடம் பழுதடைந்ததால் 2002ம் வருடம் சிறுசேமிப்பு நிதியில் இருந்து ரூ.4.90 லட்சம் செலவில் கட்டிடத்தை சீரமைத்தனர்.
இதன்பிறகு சில வருடங்களில் கட்டிடம் பழுதானதால் புதுப்பிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இதையடுத்து, பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால், அனைவ ருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 28 லட்ச ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை திறப்பு விழா நடத்தவில்லை. இதனால் பழைய கட்டிடத்தில் மாணவர்கள் விளையாடுகின்றனர். எனவே, பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடத்தை திறக்கவேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி -தமிழ்முரசு -30.10.2012
No comments:
Post a Comment