விளம்பர தொடர்புக்கு- -9445440302 -uthukottaitimes@gmail.com .
விளம்பர தொடர்புக்கு-9445440302 -uthukottaitimes@gmail.com .

Wednesday, 7 November 2012

போலீஸ்காரர்கள் பற்றாக்குறையால் திருவள்ளூர் மாவட்டத்தில் தினமும் வழிப்பறி, கொள்ளை




திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் போலீஸ்காரர்கள் பற்றாக்குறை இருப்பதால் தினமும் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை,  பூண்டி, பொன்னேரி ஆகிய இடங்களில் டிஎஸ்பி அலுவலகம் உள்ளது. பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை, திருத்தணி, கனகம்மாசத்திரம், திருவாலங்காடு, திருவள்ளூர் நகரம், திருவள்ளூர் தாலுகா, புல்லரம்பாக்கம், கடம்பத்தூர், மப்பேடு, செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு, பென்னலூர் பேட்டை, ஊத்துக்கோட்டை, வெங்கல், பெரியபாளையம், பாதிரிவேடு, பொன்னேரி, திருப்பாலைவனம், மீஞ்சூர் காட்டூர், சோழவரம், ஆரணி, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், சிப்காட், கவரைப்பேட்டை ஆகிய 29 காவல்நிலையங்கள் உள்ளன. 

இந்த காவல்நிலையங்கள் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட் டது. அப்போது ஒரு காவல் நிலையத்தில் 60 முதல் 90 போலீஸ்காரர்கள் இருந்தனர். தற்போது மக்கள் தொகை அதிகரித்துவிட்டது. ஆனால் அதற்கு தகுந்தாற்போல் போலீஸ்காரர்கள் கிடையாது. பெரும்பாலான காவல்நிலையத்தில் 30 போலீஸ்காரர்களே உள்ளனர். திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டியில் ஒரு நெடுஞ்சாலை ரோந்து வாகனமும் திருவள்ளூர், திருத்தணியில் நகர ரோந்து வாகனமும் உள்ளது. இதனால் மாவட்டத்தில் அதிகரித்துள்ள வழிப்பறி, கொள்ளை தடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். மாவட்டத்தில் கொள்ளை, வழிப்பறி நடக்காத நாட்களே கிடையாது. இதனால் பீதியில் உள்ள மக்கள், ‘காவல்நிலையத்தில் போலீஸ்காரர்கள் பற்றாக்குறையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

நன்றி -தமிழ்முரசு -07 .11.2012

No comments:

Post a Comment