விளம்பர தொடர்புக்கு- -9445440302 -uthukottaitimes@gmail.com
.
விளம்பர தொடர்புக்கு-9445440302 -uthukottaitimes@gmail.com
.
Monday, 31 December 2012
Thursday, 6 December 2012
Friday, 30 November 2012
01.12.12 ....ஊத்துக்கோட்டை டைம்ஸ் மாத இதழ் மக்களின் பேராதரவோடு வெளியீடு..
01.12.12 ....ஊத்துக்கோட்டை டைம்ஸ் மாத இதழ் மக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக இரண்டவது மாத இதழ் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்...
இம்மதா இதழ் முழுவதும் பலவண்ண (MULTI COLOR MAGAZINE )வழுவழுப்பான தாளில் அச்சிடபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது..
01.12.12 .... uttukkottai Times monthly magazine published in the second to capture popular support to be successful and to inform you that ...
Tuesday, 13 November 2012
விளம்பரம் -13.11.2012
நவம்பர் மாத இதழில் வெளியிடப்பட்ட விளம்பரம்
ஊத்துக்கோட்டை பேரூர் அஇஅதிமுக செயலாளர் திரு இராஜமாணிக்கன் அவர்களின் தீப ஒளி நல்வாழ்த்துக்கள்..
பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் உள்ள அன்னை ஆட்டோ பைனான்ஸின்
இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள்
பால்ரெட்டி கண்டிகை கிராமம் திரு பாபு அவர்களால் தயரித்து விற்பனைக்கு
வந்துள்ள சித்த மருத்துவ தயரிப்பு...
அண்ணா சிலை எதிரில் உள்ள எம்.எம் கிளினிக்
திருவள்ளுர் மாவட்டம் எல்லாபுர ஒன்றிய பாமக வின்
இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள்
நாகலாபுரம் சாலை வாகன சோதனைச்சாவடி அருகில் உள்ள அன்னை
ஆட்டோ பைனான்ஸின் இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள்
ஊத்துக்கோட்டை விவேகானந்த கல்வி குழுமத்தின்
இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள்
13.11.2012
அனைவருக்கும் வணக்கம்..13.11.2012 தீப ஓளி நாளன்று திருவள்ளூர்
மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் அனைத்து நிலையிலும்
தன்னிறைவு அடையவேண்டும் என்ற நோக்கத்துடன்
”ஊத்துக்கோட்டை டைம்ஸ்”
என்ற இதழ் வெளியிட்டு உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்து கொள்கிறோம்..
13.11.2012 அன்றைய இதழ்
இதழ் வெளிவர உதவியாக இருந்த விளம்பர தாரர்கள் மற்றும் பத்திரிகை
துறை சார்ந்த நண்பர்கள்.நிருபர்கள் பொது மக்கள் அனைவருக்கும் எங்கள்
கோடன கோடி நன்றி....
Wednesday, 7 November 2012
ஆரணி பேரூராட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், சைக்கிள்
ஊத்துக்கோட்டை: ஆரணி பேரூராட்சியில் உள்ள ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர்கள் எத்திராஜூலு, பரமசிவம் தலைமை தாங்கினர். பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், துணைத் தலைவர் கிருஷ்ணன், அதிமுக நகர செயலாளர் தயாளன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பொன்.ராஜா எம்எல்ஏ, சோழவரம் ஒன்றியக்குழு தலைவர் கார்மேகம் ஆகியோர் மாணவர்கள் 127 பேருக்கும் மாணவிகள் 169 பேருக்கும் லேப்டாப் வழங்கி பேசினர். துணை தலைமை ஆசிரியர் ஜார்ஜ், ஆசிரியர்கள் முத்துக்குமரன், முனிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கன்னிகைப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு தலைமை ஆசிரியர் அருள்மொழி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் அம்மினி மகேந்திரன், மாவட்ட கவுன்சிலர் சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார், பெற்றோர்ஆசிரியர் கழக நிர்வாகி பழனி, முன்னாள் ஊராட்சி தலைவர் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைமை ஆசிரியர் கவிதா ராணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திரன் 144 பேருக்கு லேப்டாப், 95 பேருக்கு சைக்கிள்களை வழங்கினார்.
நன்றி -தமிழ்முரசு -07.11.2012
போலீஸ்காரர்கள் பற்றாக்குறையால் திருவள்ளூர் மாவட்டத்தில் தினமும் வழிப்பறி, கொள்ளை
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் போலீஸ்காரர்கள் பற்றாக்குறை இருப்பதால் தினமும் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பூண்டி, பொன்னேரி ஆகிய இடங்களில் டிஎஸ்பி அலுவலகம் உள்ளது. பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை, திருத்தணி, கனகம்மாசத்திரம், திருவாலங்காடு, திருவள்ளூர் நகரம், திருவள்ளூர் தாலுகா, புல்லரம்பாக்கம், கடம்பத்தூர், மப்பேடு, செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு, பென்னலூர் பேட்டை, ஊத்துக்கோட்டை, வெங்கல், பெரியபாளையம், பாதிரிவேடு, பொன்னேரி, திருப்பாலைவனம், மீஞ்சூர் காட்டூர், சோழவரம், ஆரணி, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், சிப்காட், கவரைப்பேட்டை ஆகிய 29 காவல்நிலையங்கள் உள்ளன.
இந்த காவல்நிலையங்கள் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட் டது. அப்போது ஒரு காவல் நிலையத்தில் 60 முதல் 90 போலீஸ்காரர்கள் இருந்தனர். தற்போது மக்கள் தொகை அதிகரித்துவிட்டது. ஆனால் அதற்கு தகுந்தாற்போல் போலீஸ்காரர்கள் கிடையாது. பெரும்பாலான காவல்நிலையத்தில் 30 போலீஸ்காரர்களே உள்ளனர். திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டியில் ஒரு நெடுஞ்சாலை ரோந்து வாகனமும் திருவள்ளூர், திருத்தணியில் நகர ரோந்து வாகனமும் உள்ளது. இதனால் மாவட்டத்தில் அதிகரித்துள்ள வழிப்பறி, கொள்ளை தடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். மாவட்டத்தில் கொள்ளை, வழிப்பறி நடக்காத நாட்களே கிடையாது. இதனால் பீதியில் உள்ள மக்கள், ‘காவல்நிலையத்தில் போலீஸ்காரர்கள் பற்றாக்குறையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
நன்றி -தமிழ்முரசு -07 .11.2012
ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் சாலையில் அரசு பள்ளி கட்டிடம் திறக்கப்படுமா?
ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1200 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், மாம்பாக்கம், வேலக்காபுரம், பிளேஷ்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்து படித்து செல்கின்றனர். இந்த பள்ளிக்கு 1960ம் ஆண்டு எம்ஜிஆர் தனது சொந்த பணத்தில் கட்டிடம் கட்டிக்கொடுத்துள்ளார். இந்த கட்டிடம் பழுதடைந்ததால் 2002ம் வருடம் சிறுசேமிப்பு நிதியில் இருந்து ரூ.4.90 லட்சம் செலவில் கட்டிடத்தை சீரமைத்தனர்.
இதன்பிறகு சில வருடங்களில் கட்டிடம் பழுதானதால் புதுப்பிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இதையடுத்து, பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால், அனைவ ருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 28 லட்ச ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை திறப்பு விழா நடத்தவில்லை. இதனால் பழைய கட்டிடத்தில் மாணவர்கள் விளையாடுகின்றனர். எனவே, பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடத்தை திறக்கவேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி -தமிழ்முரசு -30.10.2012
Monday, 5 November 2012
ஊத்துக்கோட்டையில் நவீன சோதனைச்சாவடி
தமிழக-ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டையில் நவீன சோதனைச்சாவடி அமைக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
÷தமிழகத்தின் வடக்குப் பகுதியில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், ஆந்திர மாநில எல்லையை ஒட்டி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கெனவே எல்லைப்பகுதியை ஒட்டி கும்மிடிப்பூண்டி அருகே பெத்திகுப்பம், திருத்தணி அருகே பொன்பாடியில் போலீஸôரால் சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் ஊத்துக்கோட்டையிலும் சோதனைச்சாவடி உள்ளது.
÷ஆந்திர மாநில எல்லையை ஒட்டி உள்ளதால் திருவள்ளூர் மாவட்டம் வழியாக நக்சலைட்டுகள், கொள்ளையர் ஊடுருவல் மற்றும் செம்மரம், ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்டவை நடக்கின்றன. இவை காவல்துறைக்கு பெரும் தலைவலியாக உள்ளன.
÷சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெத்திகுப்பத்தில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ.79 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் காவல்துறை, வனத்துறை, போக்குவரத்து, சுங்கத்துறை பிரிவுகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
÷இதேபோல் திருத்தணி அருகே ஆந்திர எல்லையில் உள்ள பொன்பொடி சோதனைச்சாவடியும் ரூ.10 லட்சம் செலவில் நவீனப்படுத்தப்படுகிறது. ஊத்துக்கோட்டை வழியாகவும் ஆந்திராவில் இருந்து அடிக்கடி செம்மரங்கள் கடத்தல் நடக்கிறது. சமூகவிரோதிகள் நடமாட்டமும் உள்ளது. தற்போது அங்குள்ள காவல் சோதனைச்சாவடியில் எந்த வசதியும் இல்லை. 4 காவலர்கள் சோதனைச் சாவடியில் தங்கி சோதனை செய்கின்றனர். காவலர்களுக்கு கழிப்பறை வசதிகூட இல்லை. தற்போதுள்ள சோதனைச்சாவடியில் மழை காலத்தில் அடிக்கடி ஒழுகும் நிலை உள்ளது.
÷எனவே ஊத்துக்கோட்டையில் நவீன வசதிகளுடன் கூடிய சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் என காவலர்கள், அப்பகுதி மக்கள் எதிர்நோக்கி உள்ளனர். ஊத்துக்கோட்டை வழியாகவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஆந்திரா சென்று வருகின்றன. எனவே இங்கு நவீன மயமாக்கப்பட்ட சோதனைச்சாவடி அமைப்பது அவசியமாகிறது.
மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும் தலையிட்டு இங்கு சோதனைச்சாவடியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி-6-11-2012

ஊத்துக்கோட்டை தாலுகாக்களில் மின் தடை நேரம், மாற்றம்
திருவள்ளூர்:திருவள்ளூர், ஊத்துக்கோட்டை தாலுகாக்களில் மின் தடை நேரம், மாற்றம் செய்யப் பட்டு உள்ளது.
காலை 6 மணியிலிருந்து, 9 மணி வரை; பகல் 12 மணியிலிருந்து, மாலை 3 மணி வரை.கலெக்டர் அலுவலகம், சர்க்யூட் இல்லம், மணவாளநகர், ஒண்டிக்குப்பம்,ஜெ.என்.சாலை, ராமஞ்சேரி, கீழானூர், லேன்சர் கார் பிளாண்ட், கேட்டர் பில்லர் கம்பெனி, காக்களூர் சிட்கோட், ஆஞ்சநேயபுரம், ஈக்காடு, ஒதிக்காடு, பூண்டி, வெங்கல், வடமதுரை, பெரியபாளையம், கல்பட்டு, வெங்கல், நத்தம், கோட்டகுப்பம், சீத்தஞ்சேரி, பேரந்தூர், சூளைமேனி காலை 9 மணியிலிருந்து,
பிற்பகல் 12 மணி வரை; மாலை 3 மணியிலிருந்து, மாலை 6 மணி வரை.பூங்கா நகர், போளிவாக்கம், கொப்பூர், மேல் நல்லாத்தூர், ராமஞ்சேரி, நேதாஜி சாலை, எடப்பாளையம் பஜார் வீதி, காக்களூர் அவுசிங் போர்டு, மோதிலால் தெரு, ஊத்துக்கோட்டை, ராமபுரம், தண்ணீர்குளம், நெய்வேலி, அத்திவாக்கம், ஆலபாக்கம், பெரியபாளையம், தண்டலம், கன்னிகைப்பேர், பாண்டூர், அரும்பாக்கம், கே.கே.சத்திரம், கார்நிசாம்பட்டு, அத்திப்பட்டு, ராமாபுரம், கூர்மவிலாசபுரம், தோமூர், சென்றாயன்பாளையம், மேட்டுபாளையம், திருப்பேர், சென்னாங்காரணி.விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் அளிக்கும் நேரத்தை பொறுத்து, மின் நிறுத்தம் செய்யப்படும். நேரங்கள் வாரம்தோறும் சுழற்சி முறையில் மாறுபடும். அவ்வப்போது உள்ள மின் உற்பத்திக்கு ஏற்றவாறு, மின் தடை செய்யும் நேரங்கள் ஏறக்குறைய மாறுபட வாய்ப்பு உள்ளது என, மின்வாரிய செயற் பொறியாளர் சேகர் தெரிவித்து உள்ளார்.
நன்றி..
தினமலர்-நவம்பர் 06,2012,

Subscribe to:
Posts (Atom)