விளம்பர தொடர்புக்கு- -9445440302 -uthukottaitimes@gmail.com .
விளம்பர தொடர்புக்கு-9445440302 -uthukottaitimes@gmail.com .

Wednesday, 2 April 2014




உற்பத்தி துவங்கப்பட்ட தனியார் டயர் தொழிற்சாலையில், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை கேட்டு, அந்த தொழிற்சாலை முன், கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

ஊத்துக்கோட்டை  அடுத்த, தேர்வாய்கண்டிகை கிராமத்தில், 1,200 ஏக்கர் பரப்பளவு கொண்ட, சிப்காட் தொழிற்பூங்காவில், 290 ஏக்கர் பரப்பளவில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'மிஷலின்' டயர் தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு சமீபத்தில் உற்பத்தி துவங்கப்பட்டது.

விவசாயம் பாதிப்பு

சிப்காட்டிற்கு நிலம் எடுத்ததன் மூலம், தேர்வாய்கண்டிகை கிராமத்தில் உள்ள, மூன்று ஏரிகள் நீர்வரத்தின்றி விவசாயம் பாதித்ததுடன், தங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது என, அப்பகுதி மக்கள் தொடர் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில், தேர்வாய்கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், ஒரு நிரந்தர வேலை, ஒப்பந்த பணிகள், எரிவாயு இணைப்பு, வீடு கட்டி தருதல் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை, அந்த தொழிற்சாலையின் முகப்பில் அமர்ந்தபடி முற்றுகைஇட்டனர்.
தேர்தலுக்கு பிறகு...

தகவல் அறிந்த, பொன்னேரி ஆர்.டி.ஓ., மேனுவேல்ராஜ், மக்களின் கோரிக்கைகளை கேட்டு, தொழிற்சாலை தரப்பினருடன் கலந்து பேசினார். பின்னர், லோக் சபா தேர்தலுக்கு பின், கிராம மக்களின் கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

அதை ஏற்று, கிராம மக்கள், அந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சாலை சார்பில் பங்கேற்கும் நபர், முடிவு எடுக்க கூடியவராக இருத்தல் வேண்டும், ஊராட்சி நிர்வாகத்திடம் இருந்து தொழிற்சாலை உற்பத்திக்கான தடையில்லா சான்று பெறும் வரை உற்பத்தியை அனுமதிக்க கூடாது என, தெரிவித்தனர். அதை ஆர்.டி.ஓ., ஏற்றுக்கொண்டதன் பேரில், கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தி.ம

Tuesday, 1 April 2014

திருவள்ளூர், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் மனுதாக்கல் செய்தார்.



திருவள்ளூர், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் மனுதாக்கல் செய்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர் மனுதாக்கல்
தமிழ்நாட்டில் இந்த மாதம் 24-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் கடந்த 29-ந் தேதி தொடங்கியது. அன்றையதினம் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நேற்று மதியம் 2 மணியளவில் திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபால் அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமையில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தேர்தல் பொறுப்பாளர் ஜே.சி.பி.பிரபாகரன், மணிமாறன் எம்.எல்.ஏ. ஆகியோருடன் மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலருமான கொ.வீரராகவராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது கலெக்டர் அலுவலக வளாகம் எதிரே திரளான அ.தி.மு.க. நிர்வாகிகள் திரண்டிருந்தனர். முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் அவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் வேட்பாளர்
நேற்று மதியம் 12¼ மணியளவில் திருவள்ளூர் பாராளுமன்ற (தனி) தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விக்டரி எம்.ஜெயக்குமார் கட்சியின் மாவட்ட தலைவர்கள் வக்கீல் ஏ.ஜி.சிதம்பரம், பூவை ஜேம்ஸ் ஆகியோர் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலருமான கொ.வீரராகவராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர்களுடன் வக்கீல் ஜெயக்குமார், கொப்பூர் விஜயகுமார் மற்றும் திரளான நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அவர்கள் திருவள்ளூரில் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அசம்பாவிதங்களை தவிர்க்க கலெக்டர் அலுவலகத்தின் உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலகத்திற்குள் வருபவர்களை தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர். நேற்று காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 2 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் (தனி) தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேல், காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கா.பாஸ்கரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் வா.மைத்ரேயன் எம்.பி., சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், மொளச்சூர் இரா.பெருமாள், தண்டரை கே.மனோகரன், எஸ்.கணிதாசம்பத், செய்யூர் வி.எஸ்.ராஜீ மற்றும் பலர் உடன் இருந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்
இதே போல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரன் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும் மாவட்ட வருவாய் துறை அதிகாரியுமான எம்.சம்பத்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் தேர்தல் பொறுப்பாளரும், தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான டி.கே.எம்.சின்னையா, எம்.எல்.ஏக்கள், மொளச்சூர் இரா.பெருமாள், ப.தன்சிங், தாம்பரம் நகரமன்ற தலைவர் ம.கரிகாலன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் மண்ணூர் குட்டி என்கிற வெங்கடேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
தி.த


Monday, 31 March 2014

கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது.- பூண்டி ஏரியில் நீர் தேக்கத்தின் அளவு உயர்வு..

கண்டலேறு அனையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் நேற்று காலை தமிழக எல்லையை வந்தடைந்தது.


கிருஷ்ணா நதி நீர்
கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீரையும் பூண்டி ஏரிக்கு திறந்து விடவேண்டும். அதன்படி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி கால்வாயில் ஜனவரி மாதம் 13-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட்டனர். கண்டலேறு அணையில் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த 5-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதனால் பூண்டி ஏரியில் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.
இதனால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர மாநில பொதுப் பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்து விடும்படி கேட்டு கொண்டனர்.
தமிழக எல்லையை வந்தடைந்தது
அதன்படி கடந்த 26- ந் தேதி மாலை கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டனர். முதலில் வினாடிக்கு 200 கனஅடி வீதம் திறந்து விட்டனர். பின்னர் படிப்படியாக அதிகரித்தனர். தற்போது வினாடிக்கு 600 கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிற்கு நேற்று காலை 6 மணிக்கு கிருஷ்ணா நதி நீர் வந்தடைந்தது. வினாடிக்கு 30 கனஅடி விதம் வந்து கொண்டிருந்தது. இங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி நீர் தேக்கத்துக்கு இன்று காலை போய் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
நேற்று மதியம் 12 மணிக்கு பூண்டி ஏரியில் 17.80 அடி நீர் மட்டம் பதிவானது. வெறும் 100 மில்லியன் கனஅடி நீர் மட்டும்தான் இருப்பு உள்ளது. தற்போது கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயந்துள்ளது...

பூண்டி ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ....


பூண்டி ஏரி
திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் சத்திய மூர்த்தி நீர் தேக்கம் உள்ளது. இங்கு சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டுதான் சென்னை மக்களின் குடிநீர் ஸீதவை நிறைவேற்றப்படுகிறது. பூண்டி ஏரியில் மத்திய அரசின் கிராமிய மீன் வளர்ச்சி மேம்பபாட்டு திட்டத்தின் கீழ் உள்ளூர் மீனவர்கள் பயன்பெற மானியத்துடன் ரூ.3¼ கோடி செலவில் கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் மாதம் 64 பிளாஸ்டிக் மிதவைகளை பயன்படுத்தி மீன் குஞ்சுகள் வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவது கடந்த 10–ந் தேதி முதல் நிறுத்தப்பட்டது.
செத்து மிதக்கும் மீன்கள்
இதனால் பூண்டி ஏரியில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் ஏரியில் ஒரு பகுதி வறண்டு விட்டது. இந்த நிலையில் ஏரியில் நேற்று ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மீன்கள் செத்து மிதந்தன. தண்ணீர் மட்டம் குறைந்ததால் மீன்கள் இறந்ததா? அல்லது எதாவது நோய் தாக்கி இறந்ததா? என்று தெரியவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மானிய கடன் வாங்கி மீன் வளர்ப்பில் ஈடுபட்ட மீனவர்கள் செய்வது தெரியாமல் திகைப்படைந்துள்ளனர்.
மேலும் மீன்கள் செத்து மிதப்பதால் ஏரியின் அழகை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் துர்நாற்றத்தால் முகம் சுழித்து செல்கின்றனர். மீன்கள் செத்து மிதப்பதால் பெருத்த நஷ்டம் அடைந்த தங்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகை வழங்க முன் வரவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாய் சாலையின் குறுக்கே ஓடியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து பெண் பலியானார். மற்றொருவர் காயம் அடைந்தார்.


நாய் சாலையின் குறுக்கே ஓடியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து பெண் பலியானார். மற்றொருவர் காயம் அடைந்தார்.
விபத்து
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கொல்லபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நரசய்யா. இவரது மனைவி ராஜம்மாள் (வயது 62). இவர் தன்னுடைய பேரன் பிரசாத் (22) உடன் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூருக்கு சென்றார். அங்கு உறவினர்களை சந்தித்த பின் ஊருக்கு புறப்பட்டார். பிரசாத் மோட்டார் சைக்கிளை ஓட்டினர். ராஜம்மாள் பின்னால் அமர்ந்திருந்தார்.
பூண்டி கூட்டு சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் குருக்கே நாய் ஒன்று திடீர் என்று ஓடியது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
பெண் பலி
இவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் ராஜம்மாளை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்த்ரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து பென்னாலு£ர்பேட்டை இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 

பூமி பூஜை போடும் இடத்திற்கு தேர்தல் பார்வையாளர்கள் திடீரென வந்ததால், அமைச்சர்கள், காரில் ஏறி பறந்தனர்

ஊத்துக்கோட்டை: 

ஜெயலலிதா வருகையை ஒட்டி, பூமி பூஜை போடும் இடத்திற்கு தேர்தல் பார்வையாளர்கள் திடீரென வந்ததால், அமைச்சர்கள், காரில் ஏறி பறந்தனர். திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து, வரும், 8ம் தேதி, பெரியபாளையம் அடுத்த வடமதுரை கிராமத்தில், பிரசாரம் செய்ய உள்ளார். அமாவாசை நாளான, நேற்று முன்தினம் மாலை, பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு, பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடந்தது.
அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், ரமணா, மூர்த்தி, அப்துல்ரஹீம், எம்.எல்.ஏ.,க்கள் பொன்.ராஜா, மணிமாறன் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் கட்சி பிரமுகர்கள் இருந்தனர். அமைச்சர்கள் வந்ததால், எல்லாபுரத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தங்களது வாகனங்களில் குவிந்தனர். அப்போது, தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் அகிலேந்திர பிரதாப் யாதவ், அஜய்தேகோ ஆகியோர், காரில், பெரியபாளையம் வழியாக திருவள்ளூர்சென்றனர். 

வடமதுரை சென்றபோது, மைதானத்தின் ஒரு பகுதியில் அ.தி.மு.க., கட்சிக் கொடிகள் மற்றும் வாகனங்கள் அதிகமாக இருந்தததை கண்ட அதிகாரிகள், அந்த இடத்திற்குச் சென்றனர். அதிகாரிகள் வருவதை கண்ட அமைச்சர்கள், ஒருவர் பின் ஒருவராக காரில் ஏறி பறந்தனர். அங்கு சென்ற அதிகாரிகள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்தனர். அதிகாரிகள் சென்றவுடன், பொதுக்கூட்ட மேடை அமைக்க, பூமி பூஜை போடப்பட்டது.

5 கோடி சில்லரை காசுகள் - 7 சரக்கு பெட்டிகள்- தேர்தல் ஆணையம் சுற்றி வளைப்பு..

5 கோடி சில்லரை- 7 சரக்கு பெட்டிகள்- தேர்தல் ஆணையம் சுற்றி வளைப்பு..


சோழவரம் : கன்டெய்னர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட, ஐந்து கோடி ரூபாய் சில்லரை நாணயங்கள் குறித்து, தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
பொன்னேரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், சென்னை கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, தேர்தல் கண்காணிப்பு குழுவினர். அதிகாரி லட்சுமணன் தலைமையில், நல்லுார் சுங்கச் சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அடுத்தடுத்து வரிசையாக, சென்னை நோக்கி சென்ற, ஏழு கன்டெய்னர் லாரிகளை மடக்கினர். அவை பூட்டப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டிருந்தன. வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அவை, கோல்கட்டாவில் இருந்து வருவதாக 
தெரிவித்தனர்.
தொடர் விசாரணையில், லாரிகளில், ஐந்து கோடி ரூபாய் சில்லரை நாணயங்கள் இருப்பதாகவும், அவை, சென்னையில் உள்ள, ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் கூறினர்.
போதிய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஆவணங்கள் இல்லாததால், உரிய ஆவணங்களை காண்பித்துவிட்டு, எடுத்து செல்லும்படி அறிவுறுத்த பட்டது.
அதை தொடர்ந்து, ஏழு கன்டெய்னர் வாகனங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது குறித்து, தகவல் அறிந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விரைந்து சென்று, உரிய ஆவணங்களை காண்பித்தனர். அதன்பின், வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.