நாய் சாலையின் குறுக்கே ஓடியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து பெண் பலியானார். மற்றொருவர் காயம் அடைந்தார்.
விபத்து
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கொல்லபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நரசய்யா. இவரது மனைவி ராஜம்மாள் (வயது 62). இவர் தன்னுடைய பேரன் பிரசாத் (22) உடன் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூருக்கு சென்றார். அங்கு உறவினர்களை சந்தித்த பின் ஊருக்கு புறப்பட்டார். பிரசாத் மோட்டார் சைக்கிளை ஓட்டினர். ராஜம்மாள் பின்னால் அமர்ந்திருந்தார்.
பூண்டி கூட்டு சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் குருக்கே நாய் ஒன்று திடீர் என்று ஓடியது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
பெண் பலி
இவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் ராஜம்மாளை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்த்ரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து பென்னாலு£ர்பேட்டை இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment