விளம்பர தொடர்புக்கு- -9445440302 -uthukottaitimes@gmail.com .
விளம்பர தொடர்புக்கு-9445440302 -uthukottaitimes@gmail.com .

Monday, 31 March 2014

பூமி பூஜை போடும் இடத்திற்கு தேர்தல் பார்வையாளர்கள் திடீரென வந்ததால், அமைச்சர்கள், காரில் ஏறி பறந்தனர்

ஊத்துக்கோட்டை: 

ஜெயலலிதா வருகையை ஒட்டி, பூமி பூஜை போடும் இடத்திற்கு தேர்தல் பார்வையாளர்கள் திடீரென வந்ததால், அமைச்சர்கள், காரில் ஏறி பறந்தனர். திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து, வரும், 8ம் தேதி, பெரியபாளையம் அடுத்த வடமதுரை கிராமத்தில், பிரசாரம் செய்ய உள்ளார். அமாவாசை நாளான, நேற்று முன்தினம் மாலை, பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு, பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடந்தது.
அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், ரமணா, மூர்த்தி, அப்துல்ரஹீம், எம்.எல்.ஏ.,க்கள் பொன்.ராஜா, மணிமாறன் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் கட்சி பிரமுகர்கள் இருந்தனர். அமைச்சர்கள் வந்ததால், எல்லாபுரத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தங்களது வாகனங்களில் குவிந்தனர். அப்போது, தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் அகிலேந்திர பிரதாப் யாதவ், அஜய்தேகோ ஆகியோர், காரில், பெரியபாளையம் வழியாக திருவள்ளூர்சென்றனர். 

வடமதுரை சென்றபோது, மைதானத்தின் ஒரு பகுதியில் அ.தி.மு.க., கட்சிக் கொடிகள் மற்றும் வாகனங்கள் அதிகமாக இருந்தததை கண்ட அதிகாரிகள், அந்த இடத்திற்குச் சென்றனர். அதிகாரிகள் வருவதை கண்ட அமைச்சர்கள், ஒருவர் பின் ஒருவராக காரில் ஏறி பறந்தனர். அங்கு சென்ற அதிகாரிகள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்தனர். அதிகாரிகள் சென்றவுடன், பொதுக்கூட்ட மேடை அமைக்க, பூமி பூஜை போடப்பட்டது.

No comments:

Post a Comment