விளம்பர தொடர்புக்கு- -9445440302 -uthukottaitimes@gmail.com .
விளம்பர தொடர்புக்கு-9445440302 -uthukottaitimes@gmail.com .

Tuesday, 1 April 2014

திருவள்ளூர், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் மனுதாக்கல் செய்தார்.



திருவள்ளூர், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் மனுதாக்கல் செய்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர் மனுதாக்கல்
தமிழ்நாட்டில் இந்த மாதம் 24-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் கடந்த 29-ந் தேதி தொடங்கியது. அன்றையதினம் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நேற்று மதியம் 2 மணியளவில் திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபால் அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமையில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தேர்தல் பொறுப்பாளர் ஜே.சி.பி.பிரபாகரன், மணிமாறன் எம்.எல்.ஏ. ஆகியோருடன் மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலருமான கொ.வீரராகவராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது கலெக்டர் அலுவலக வளாகம் எதிரே திரளான அ.தி.மு.க. நிர்வாகிகள் திரண்டிருந்தனர். முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் அவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் வேட்பாளர்
நேற்று மதியம் 12¼ மணியளவில் திருவள்ளூர் பாராளுமன்ற (தனி) தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விக்டரி எம்.ஜெயக்குமார் கட்சியின் மாவட்ட தலைவர்கள் வக்கீல் ஏ.ஜி.சிதம்பரம், பூவை ஜேம்ஸ் ஆகியோர் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலருமான கொ.வீரராகவராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர்களுடன் வக்கீல் ஜெயக்குமார், கொப்பூர் விஜயகுமார் மற்றும் திரளான நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அவர்கள் திருவள்ளூரில் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அசம்பாவிதங்களை தவிர்க்க கலெக்டர் அலுவலகத்தின் உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலகத்திற்குள் வருபவர்களை தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர். நேற்று காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 2 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் (தனி) தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேல், காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கா.பாஸ்கரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் வா.மைத்ரேயன் எம்.பி., சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், மொளச்சூர் இரா.பெருமாள், தண்டரை கே.மனோகரன், எஸ்.கணிதாசம்பத், செய்யூர் வி.எஸ்.ராஜீ மற்றும் பலர் உடன் இருந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்
இதே போல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரன் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும் மாவட்ட வருவாய் துறை அதிகாரியுமான எம்.சம்பத்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் தேர்தல் பொறுப்பாளரும், தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான டி.கே.எம்.சின்னையா, எம்.எல்.ஏக்கள், மொளச்சூர் இரா.பெருமாள், ப.தன்சிங், தாம்பரம் நகரமன்ற தலைவர் ம.கரிகாலன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் மண்ணூர் குட்டி என்கிற வெங்கடேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
தி.த


No comments:

Post a Comment