விளம்பர தொடர்புக்கு- -9445440302 -uthukottaitimes@gmail.com .
விளம்பர தொடர்புக்கு-9445440302 -uthukottaitimes@gmail.com .

Monday, 31 March 2014

பூண்டி ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ....


பூண்டி ஏரி
திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் சத்திய மூர்த்தி நீர் தேக்கம் உள்ளது. இங்கு சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டுதான் சென்னை மக்களின் குடிநீர் ஸீதவை நிறைவேற்றப்படுகிறது. பூண்டி ஏரியில் மத்திய அரசின் கிராமிய மீன் வளர்ச்சி மேம்பபாட்டு திட்டத்தின் கீழ் உள்ளூர் மீனவர்கள் பயன்பெற மானியத்துடன் ரூ.3¼ கோடி செலவில் கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் மாதம் 64 பிளாஸ்டிக் மிதவைகளை பயன்படுத்தி மீன் குஞ்சுகள் வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவது கடந்த 10–ந் தேதி முதல் நிறுத்தப்பட்டது.
செத்து மிதக்கும் மீன்கள்
இதனால் பூண்டி ஏரியில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் ஏரியில் ஒரு பகுதி வறண்டு விட்டது. இந்த நிலையில் ஏரியில் நேற்று ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மீன்கள் செத்து மிதந்தன. தண்ணீர் மட்டம் குறைந்ததால் மீன்கள் இறந்ததா? அல்லது எதாவது நோய் தாக்கி இறந்ததா? என்று தெரியவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மானிய கடன் வாங்கி மீன் வளர்ப்பில் ஈடுபட்ட மீனவர்கள் செய்வது தெரியாமல் திகைப்படைந்துள்ளனர்.
மேலும் மீன்கள் செத்து மிதப்பதால் ஏரியின் அழகை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் துர்நாற்றத்தால் முகம் சுழித்து செல்கின்றனர். மீன்கள் செத்து மிதப்பதால் பெருத்த நஷ்டம் அடைந்த தங்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகை வழங்க முன் வரவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment