உற்பத்தி துவங்கப்பட்ட தனியார் டயர் தொழிற்சாலையில், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை கேட்டு, அந்த தொழிற்சாலை முன், கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த, தேர்வாய்கண்டிகை கிராமத்தில், 1,200 ஏக்கர் பரப்பளவு கொண்ட, சிப்காட் தொழிற்பூங்காவில், 290 ஏக்கர் பரப்பளவில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'மிஷலின்' டயர் தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு சமீபத்தில் உற்பத்தி துவங்கப்பட்டது.
விவசாயம் பாதிப்பு
சிப்காட்டிற்கு நிலம் எடுத்ததன் மூலம், தேர்வாய்கண்டிகை கிராமத்தில் உள்ள, மூன்று ஏரிகள் நீர்வரத்தின்றி விவசாயம் பாதித்ததுடன், தங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது என, அப்பகுதி மக்கள் தொடர் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில், தேர்வாய்கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், ஒரு நிரந்தர வேலை, ஒப்பந்த பணிகள், எரிவாயு இணைப்பு, வீடு கட்டி தருதல் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை, அந்த தொழிற்சாலையின் முகப்பில் அமர்ந்தபடி முற்றுகைஇட்டனர்.
தேர்தலுக்கு பிறகு...
தகவல் அறிந்த, பொன்னேரி ஆர்.டி.ஓ., மேனுவேல்ராஜ், மக்களின் கோரிக்கைகளை கேட்டு, தொழிற்சாலை தரப்பினருடன் கலந்து பேசினார். பின்னர், லோக் சபா தேர்தலுக்கு பின், கிராம மக்களின் கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.
அதை ஏற்று, கிராம மக்கள், அந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சாலை சார்பில் பங்கேற்கும் நபர், முடிவு எடுக்க கூடியவராக இருத்தல் வேண்டும், ஊராட்சி நிர்வாகத்திடம் இருந்து தொழிற்சாலை உற்பத்திக்கான தடையில்லா சான்று பெறும் வரை உற்பத்தியை அனுமதிக்க கூடாது என, தெரிவித்தனர். அதை ஆர்.டி.ஓ., ஏற்றுக்கொண்டதன் பேரில், கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தி.ம
No comments:
Post a Comment