திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் 6 வேட்பாளர்களில் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 3 கட்சியினர் தனித்துப் போட்டியிடுகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் இதுவரை அதிமுக, திமுக கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாஜக கூட்டணி சார்பில் தேமுதிக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் அதிமுக, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியோர் தனித்துப் போட்டியிடுகின்றனர். திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் 6 கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திங்கள்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
திருவள்ளூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி. வேணுகோபால், திமுக சார்பில் கூட்டணியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக ரவிக்குமார், பாஜக சார்பில் கூட்டணிக் கட்சியான தேமுதிகவின் வேட்பாளராக யுவராஜ், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக விக்டரி ஜெயக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.கண்ணன், பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக சத்தியமூர்த்தி ஆகியோர் நேரடியாக களத்தில் போட்டியிடவுள்ளனர்.
இந்த தேர்தலில் அந்தந்த கட்சியின் தலைமை அறிவிக்கும் தேர்தல் ஒருபுறம் இருந்தாலும், அறிக்கைகள் இருந்தாலும் திருவள்ளூர் தொகுதிக்கு உள்பட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு யார் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்களோ அவர்களுக்குதான் மக்களிடையே வரவேற்பு இருக்கும் என மக்கள் தரப்பில்
கூறப்படுகிறது.
No comments:
Post a Comment