விளம்பர தொடர்புக்கு- -9445440302 -uthukottaitimes@gmail.com .
விளம்பர தொடர்புக்கு-9445440302 -uthukottaitimes@gmail.com .

Friday, 28 March 2014

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு ...




திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் அனைவருக்கும் 2014–15 நிதியாண்டிற்கான நேர்காணல் வருகிற 1–4–2014 முதல் 30–6–2014 வரை நடைபெறுகிறது. ஓய்வூதியதாரர்கள் தொடர்புடைய சார் கருவூல அலுவலகங்களுக்கு தங்களின் ஒய்வூதிய புத்தகத்துடன் நேர்காணல் செய்யவும். அல்லது உரிய மருத்துவரிடம் பெற்ற வாழ்நாள் சான்றை அளிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அவர்களின் ஓய்வூதியம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி ஆகஸ்டு மாதம் முதல் நிறுத்தப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் ஓய்வூதியம் மாதம் ரூ.18 ஆயிரத்துக்கும் மேல் பெறுபவர்கள் அனைவரும் தங்களின் வருமான வரி தொடர்பான படிவம் மற்றும் பான் எண், தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண் ஆகியவற்றை மாவட்ட கருவூல அலுவலரிடம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment