சூளைமேனியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி பெண் பலி
சூளைமேனி, மார்ச். 27
ஊத்துக்கோட்டை சூளை மேனி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி எல்லம்மாள் (வயது 55). நேற்று மாலை எல்லம்மாளும், அதே பகுதியை சேர்ந்த சின்னமுத்து மனைவி அற்புதமும் (40). ஊத்துக் கோட்டை பெரிய பாளைம் சாலையில் நடந்து சென்றனர்.
அப்போது பெரிய பாளையம் நோக்கி சென்ற கார் டிரைவர் கட்டுப்பாடை இழந்து தாறுமாறாக ஓடியது.
திடீரென நடந்து சென்ற எல்லம்மாள், அற்புதம் மீது கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே எல்லம்மாள் பரிதாபமாக இறந்தார். அற்புதம் பலத்த காயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எல்லம்மாளின் உடல் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
விபத்து நடந்ததும் அப்பகுதி மக்கள் கார் டிரைவர் கரடிபுத்தூரை சேர்ந்த வேலுவை பிடித்து ஊத்துக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment