லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரோ, அரசியல் கட்சியினரோ,
நாளிதழ், தொலைக்காட்சிகளில், விளம்பரம் செய்திட, ஊடக சான்றளித்தல்
மற்றும் கண்காணிப்பு குழுவிடம், மூன்று நாட்களுக்கு முன்பாக விண்ணப்பித்து உரிய அனுமதி பெற வேண்டும் என, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
திருவள்ளுர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கேபிள் 'டிவி'களில் தேர்தல் விளம்பரம் ஒளி பரப்புவது குறித்த ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது.
கூட்டத்தில், ஆட்சியர் வீர ராகவ ராவ், பேசியதாவது:
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அல்லது பதிவு பெற்ற அரசியல் கட்சி நாளிதழ்கள், வானொ லியில், தொலைக்காட்சி அலைவரிசைகளில் அல்லது சமூக வலைதளங்களில், வெளியிட கருதியுள்ள விளம்பரங்களுக்கு கண்டிப்பாக, ஊடக சான்றளித்தல் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் சான்றி தழ்கள் பெறப்பட்டிருக்க வேண்டும். விளம்பரம் ஒலிபரப்பாகவுள்ள மூன்று நாட்களுக்கு முன், விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு அனுமதி பெற வேண்டும். மேற்படி விளம்பரத்திற்குண்டான கட்டண தொகையினை, காசோலையாகவே பெறப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment