திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனுக்கு திருவள்ளூர் பஜார் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.
இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் திருவள்ளூர் டவுண் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் பஜார், ஜே.என்.சாலை, புங்கத்தூர் ராஜாஜிசாலை, அகரம் தெரு, காந்திநகர், நேதாஜிதெரு, ராஜாஜிசாலை, போன்ற பகுதிகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது அங்குள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்து அவற்றை கைப்பற்றினர்.
இது குறித்து திருவள்ளூர் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து பான்பராக், குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக திருவள்ளூரை சேர்ந்த பாலாஜி (27), விஜி (24), கோவிந்தன் (56), கோபிநாத் (34), ராஜா (38), ராஜேந்திரன்(42), தெய்வசிகாமணி (66), லோகேஷ்பாபு (28), மணி(21), சவுந்தரபாண்டியன் (65) ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment