தே.மு.தி.க. வேட்பாளர்
திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க, தேமுதிக, பாஜக, மாதிமுக, ஆகிய கட்சிகள் பலம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது..
இதில் பா.ம.க விற்கு தொகுதி முழுவதிலும் செல்வாக்கு கூடுதலாக உள்ளது. அடுத்தப் படியாக தேமுதிக விற்கும் பலம் உள்ளது...
திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் வி.யுவராஜ், நேற்று சி.எச்.சேகர் எம்.எல்.ஏ. தலைமையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்து கலெக்டர் வீரராகவராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது அவருடன் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் கோ.ரவிராஜ், பா.ஜ.க. நிர்வாகி ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், ம.தி.மு.க. திருவள்ளூர் தொகுதி பொறுப்பாளர் பாபு ஆகியோர் உடன் வந்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜ்க்கு கட்சி நிர்வாகிகள் திரளானவர்கள் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
No comments:
Post a Comment