விளம்பர தொடர்புக்கு- -9445440302 -uthukottaitimes@gmail.com .
விளம்பர தொடர்புக்கு-9445440302 -uthukottaitimes@gmail.com .

Wednesday, 2 April 2014

வேர்க்கடலை கொள்முதல் விவசாயிகள் கோரிக்கை

வேர்க்கடலை கொள்முதல் விவசாயிகள் கோரிக்கை






ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான தாராட்சி, பாலவாக்கம், சூளைமேனி, தண்டலம், பெரியபாளையம், கன்னிகைபேர், போந்தவாக்கம், சீத்தஞ்சேரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் வேர்க்கடலை பயிர் செய்துள்ளனர். 

கடந்த டிசம்பர் மாதம் விதைத்து மார்ச், ஏப்ரல் மாதத்தில் அறுவடை செய்து விவசாயிகள் விற்பனை செய்கிறார்கள்.
இதுகுறித்து விசாயிகள் கூறுகையில், வேர்க்கடலை 3 மாத பயிர். இந்த ஆண்டு சரிவர மழை இல்லை. இதனால் ஒரு ஏக்கருக்கு 40 மூட்டை கிடைக்க வேண்டிய வேர்க்கடலை 30 முதல் 35 மூட்டைகள் மட்டுமே கிடைக்கிறது. 
மேலும் 40 கிலோ வேர்க்கடலை ரூ.1300க்கு தனியாருக்கு விற்கிறோம். 
அரசாங்கமே இந்த வேர்க்கடலையை கொள்முதல் செய்து ரூ.1400 வழங்க வேண்டும். 
மேலும் இந்த முறை மழை குறைவு என்பதால் வேர்க்கடலை விதைத்த விவசாயிகளுக்கு அரசு நஷ்டஈடு வழங்கவேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment