விளம்பர தொடர்புக்கு- -9445440302 -uthukottaitimes@gmail.com .
விளம்பர தொடர்புக்கு-9445440302 -uthukottaitimes@gmail.com .

Wednesday, 2 April 2014

கிராமங்களில் தேர்தல் விழிப்புணர்வு பதாகைகள்






ஊத்துக்கோட்டை, : 


தமிழகத்தில் வரும் 24ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது கடமை என மாணவ, மாணவியர்களின் மனித சங்கிலி, பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூறி வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று தேர்தல் ஆணையத்தின் சார்பில், தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை. வாக்களித்து ஜனநாயகத்தை காக்க வேண்டும். கையூட்டு பெற்று வாக்களிக்கக் கூடாது. ஓட்டுக்கு பணம் பெற்றால் ஒரு வருடம் சிறை தண்டனை என்று பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளும் பிளக்ஸ் போர்டுகளும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், பெரியபாளையம், கன்னிகைபேர் உள்ளிட்ட  பல பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.

தி.க

No comments:

Post a Comment