திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று பிரசாரம் செய்கிறார்.
மேடை அமைக்கும் பணி
திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் வேணுகோபாலை ஆதரித்து திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரையில் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று (செவ்வாய்க்கிழமை) பிரசாரம் செய்ய உள்ளார். அதற்காக 36–க்கு 22 என்ற அளவில் மேடை அமைக்கும் பணி, 300–க்கு 300 என்ற அளவில் ‘ஹெலிபேட்’ அமைக்கும் பணி 30 ஏக்கர் பரப்பளவில் கடந்த 30–ந்தேதி மாலை பூமி பூஜையுடன் தொடங்கியது. அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், மாதவரம் மூர்த்தி, ரமணா, அப்துல்ரஹீம், எம்.எல்.ஏ.க்கள் மணிமாறன், பொன்ராஜா, திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.
1½ லட்சம் பேர்
பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் 40 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடியவாறும், சுமார் 1½ லட்சம் பேர் பங்கேற்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நுழைவுவாயில் டெல்லி செங்கோட்டை போன்று அமைக்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு செய்துள்ளது..
No comments:
Post a Comment