ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை அருகே வேலைக்கு செல்லவில்லை என்று மனைவி கண்டித்ததால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
தகராறு
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கோட்டைகுளம் கிராமத்தை சேர்நதவர் வடிவேலு (வயது 35). இவரது மனைவி செஞ்சம்மாள் (30). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். செஞ்சம்மாள் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். வடிவேலு வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது.
இதை செஞ்சம்மாள் பல முறை கண்டித்தார். ஆனால் வடிவேலு நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இது குறித்து நேற்று மாலை கணவன், மனைவிக்கு இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
தற்கொலை
அதன் பின்னர் செஞ்சம்மாள் அதே கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வேதனையடைந்த வடிவேலு அருகே உள்ள காட்டுக்கு சென்று அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இது குறித்து பென்னாலூ£பேட்டை சப் இன்ஸபெக்டர் நரேஷ் வழக்குப்பதிவு செய்து வடிவேலுவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
தி.த..
No comments:
Post a Comment